திரையுலகம் அமலா பால் காட்டில் மழை

அமலா பால் காட்டில் மழை

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரடக்ஷன்ஸ் தயா‌ரிக்கும் ‘வேட்டை’ படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.
பையா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லிங்குசாமி படத்தை இயக்குகிறார். சிம்புவை டிராப் செய்துவிட்டு விஜய்-க்காக காத்திருந்தார் லிங்குசாமி.

ஆனால் இளைய தளபதி பிசியாக இருந்ததால், யாரை ஹீரோவாக போடலாம் என யோசித்து வந்தார் லிங்குசாமி. இதனையடுத்து ஆர்யாவை ஹீரோவாக தேர்வு செய்தார் லிங்குசாமி. ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா அல்லது அனுஷ்கா நடிக்கலாம் என பேச்சுக்கள் அடிப்பட்டன.

ஆனால் ‘வேட்டை’ படத்தில் அனுஷ்காவுக்கு பதிலாக அமலா பால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு அமலாவிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் தேடி வருகின்றன

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி