திரையுலகம் விஜய்யின் புது ரசிகர்கள்….

விஜய்யின் புது ரசிகர்கள்….

vijay-02

தொடர் தோல்விகளுக்குப் பிறகு விஜய், மறுபடியும் தனது ரீமேக் ஃபார்மூலாவுக்கு திரும்பியிருப்பது அனைவரும் அறிந்த செய்திதான். அதன் மூலம் மலையாளத்தில் வெற்றிப்பெற்ற பாடிகாட் படத்தை தமிழில் ‘காவலன்’ என்ற பெயரில் நடித்து வரும் விஜய் இப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

சித்தார்த்தின் காமெடி ஃபார்முலாவில் உருவாகும் இப்படத்தில் மூன்றாவது முறையாக அசின், விஜயுடன் சேர்ந்திருக்கிறார். இதுபோன்ற விஷயங்கள் விஜய்க்கு இப்படம் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையை கொடுத்தாலும், விஜயின் ரசிகர்கள் அவருக்காக இப்படத்தை கண்டிப்பாக பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்களாம்.

விஜய் ரசிகர்கள் விஜய் படத்தை பார்ப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் பார்த்த படத்தை மறுபடியும் விஜய்க்காக பார்க்கப் போகிறார்களாம். அதுவும் விஜயின் மலையாள ரசிகர்கள். ஆம், ‘காவலன்’ படத்தை கேரளாவிலும் வெளியிடப்போகிறார்களாம். இதற்காக கேரள பத்திரிகையாளர்களையும், கேரள மக்களையும் சந்தித்து வந்திருக்கிறார் விஜய். அந்த சந்திப்பின் போது “இந்த படத்தை ஏற்கனவே மலையாளத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், இப்போது இதன் ரீமேக்கில் நான் நடித்திருக்கிறேன். இங்கேயும் வெளியாகாப் போகிறது நீங்கள் பார்ப்பீர்களா? என்று கூடி நின்ற மக்களிடம் விஜய் கேட்க, “அதற்கு என்ன?! படத்தின் கதை ஒன்றாக இருந்தாலும் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மாறும் போது, வித்தியாசமாகத்தான இருக்கும். அதனால் நாங்கள் கண்டிப்பாக ‘காவலன்’ படத்தைப் பார்ப்போம்” என்று கூறினார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி