திரையுலகம் ஷங்கர் இயக்கத்தில் மகேஷ்பாபு

ஷங்கர் இயக்கத்தில் மகேஷ்பாபு

Director Shankar going to take telugu movie with Maghesh Babu

இயக்குநர் ஷங்கர் “3 இடியட்ஸ்” படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளில் மும்முரமாகிவிட்டார். ஆனால் தமிழ் படத்திற்காக அல்ல. தெலுங்குப் படத்திற்காக.

தமிழில் விஜயிடமிருந்து கால்ஷீட் கிடைக்கத் தாமதமாவதால், தெலுங்குப் படத்திற்காக மகேஷ்பாபுவை வைத்து வேலைகளைத் தொடங்கிவிட்டாராம் ஷங்கர்.

தமிழில் விஜயுடன் சேர்ந்து ஜீவாவும் நடிப்பதாகத் தெரிகிறது, மற்றொரு கேரக்டருக்கு ஆர்யாவிடமும், சித்தார்த்திடமும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு பேருக்குமே தெலுங்கிலும் ரசிகர்கள் இருப்பதால் இருவரையுமே தெலுங்கில் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற யோசனையில் இருக்கிறார் ஷங்கர் என்றும் சில செய்திகள் சொல்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி