போலீஸ்

செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த டாக்டர்!…

இந்தூர்:-இந்தூரில் உள்ள பாலசியா பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் அர்பித் சோப்ரா. இவர் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி உள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களிடையே இந்த உறவு இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளது. பின்னர்தான், அர்பித் சோப்ராவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 7ம் தேதி அர்பித் சோப்ரா அந்த பெண் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!…

டேராடூன்:-உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு புதிதாக வாடகைக்கு குடிவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், அந்த வீட்டு உரிமையாளரின் 16 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, அவளது வாயைப் பொத்தி, மிரட்டி, கற்பழித்தார். இதை வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டிய அவர், தொடர்ந்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் பயந்துப்போய் இது தொடர்பாக யாரிடமும் மூச்சு விடாமல் இருந்து விட்டாள்.இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணின் தங்கையான 11 வயது சிறுமியையும் அவர் கற்பழித்து, சீரழித்தார். ஆனால், அந்தச் சிறுமி, தனது அக்காவைப் போல் அமைதியாக இருந்துவிடாமல் நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறி அழுது, முறையிட்டாள். இதனையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இருவரும் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, குற்றவாளியை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள்

சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!…

புதுடெல்லி:-கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குற்றவாளி குறித்து அளித்த அடையாளங்களை வைத்து காவல் துறையினர் ஒரு வரைபடத்தை தயார் செய்தனர். பின்னர் சம்பவ இடங்களில் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராவில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு 16 வயது சிறுவன் அழைத்து சென்றது தெரிந்தது.மற்றொரு சிறுமியிடம் விசாரித்தபோது அவரும் இதே அடையாளங்களை சொன்னதால், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் போதை பழக்கத்தில் இருந்து விலகுவதற்காக மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்துள்ளார், தீபாவளிக்கு வீடு திரும்பிய அச்சிறுவன் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன்!…

ராய்பூர்:-ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3 வயது குழந்தை, அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக போதை தலைக்கேறிய நிலையில் வந்த சுக்தேவ் தனுஹர்(50) என்பவன் சாக்லேட் வாங்கித் தருவதாக அந்த சிறுமிக்கு ஆசைகாட்டி தனிமையான இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பச்சிளம் தளிர் என்றும் பாராமல், தனது தகாத இச்சையை தீர்த்துக் கொள்ள முயன்ற அந்த காமக் கொடூரன், வலியால் குழந்தை வீறிட்டு அலறத் தொடங்கியதும் அங்கிருந்து தப்பியோடி விட்டான். குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அந்த இடத்துக்கு விரைந்த பெற்றோர், அவளது உடலில் காயங்கள் இருப்பது கண்டு பதறிப்போய் போலீசில் புகார் அளித்தனர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, குழந்தை கூறிய அடையாளங்களை வைத்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

செய்திகள்

போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது!…

ஐதராபாத்:-திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர் போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சிலர் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட தன்னை பிரண்ட்ஸ் – ஆக சேர்த்துக் கொள்ளுமாறு பேசி தொந்தரவு கொடுத்துள்ளனர். எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது செல்போன் எண், போலி பேஸ்புக் கணக்கில் தெரிவிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார் சிவ கிருஷ்ணாவை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவலை குற்றவாளி, வேலைவாய்ப்பு தொடர்பான இணையத்தள டேட்டாபேஸில் இருந்து எடுத்துள்ளார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவ கிருஷ்ணா, புகார் அளித்த பெண்ணின் செல்போன் எண்ணை கண்டதும், அழைப்பு விடுத்து பேசியுள்ளார். எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். ஆனால் பெண் பதில் அளிக்கவில்லை. பெண் பதில் எதுவும் கூறாத நிலையில் எரிச்சல் அடைந்த சிவ கிருஷ்ணா அவரது செல்போன் எண்ணை கொண்டு போலி பேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை போன்றே தகவல்கள் பரிமாறிக் கொண்டுள்ளார், என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

பெங்களூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!…

பெங்களூர்:-பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில் சிறுமி படிக்கும் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜெய்ஷங்கர் சிறுமியை இருமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் அலோக் குமார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமி அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என்ற வழிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். பெங்களூரில் கடந்த இரு வாரங்களில் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…

பெங்களூர்:-கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பல் டாக்டரான சுமாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு அபிஷேக்கும், சுமாவும் மல்லேசுவரம் அருகே வாடகை வீட்டில் வசித்தனர். திருமணம் ஆன நாளில் இருந்து அபிஷேக் சுமாவுடன் தாம்பத்ய உறவை தவிர்த்து வந்து உள்ளார். மேலும் வீட்டிற்கு உள்ளேயே தனி அறையில் அபிஷேக் படுத்து தூங்கினார். அத்துடன் பெண்கள் பயன்படுத்தும் உதட்டு சாயத்தையும், பெண்களுக்கான பொருட்களையே அபிஷேக் விரும்பி பயன்படுத்தி வந்துள்ளார். இதுபற்றி சுமாவுக்கு தெரிந்ததும் மிகவும் மனம் உடைந்து விட்டார். பின்னர் தன்னுடைய கணவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்க, அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக டாக்டரிடம் செல்லலாம் என்று சுமா கூறினார். இதற்கு அபிஷேக் மறுத்து விட்டார். இதனால் தனது கணவர் குறித்து, அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடம் கேட்டபோது யாரும் சரியான பதிலை சுமாவுக்கு சொல்லவில்லை. இதனால் தன்னுடைய கணவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள சுமா முடிவு செய்தார்.இதற்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவரிடம் முதலில் விசாரித்தார். அப்போது அவர்கள் ‘‘நீங்கள் வீட்டில் இல்லாதபோது உங்களது வீட்டிற்கு ஆண்கள் அடிக்கடி வந்து செல்கிறார்கள்’’ என்று கூறினர். இதுபற்றி கணவர் அபிஷேக்கிடம் சுமா கேட்டார். அப்போது அவர், தொழில் மற்றும் வேலை விஷயமாக பல்வேறு ஆண்கள் வீட்டிற்கு வருகிறார்கள், வேறு ஒன்றும் இல்லை என்று தெரிவித்து விட்டார். என்றாலும், கணவர் மீது சந்தேகம் அடைந்த சுமா, தன்னுடைய வீட்டு அறை முழுவதும் ரகசிய கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினார். பின்னர் அவர் ஒரு வாரம் தன்னுடைய சொந்த ஊரான தும்கூருக்கு புறப்பட்டு சென்று விட்டார். தும்கூரில் இருந்து பெங்களூருக்கு திரும்பிய சுமாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய வீட்டில் பொருத்தி வைத்திருந்த கண்காணிப்பு ரகசிய காமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த காட்சிகளில் தனது கணவர் ஆண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதோடு தனது கணவர் ஓரினசேர்க்கையாளர் என்பதும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதையும் அறிந்து அதிர்ந்தார். இதையடுத்து, காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை சி.டி.யில் பதிவு செய்து இந்த ஆதாரத்துடன் கடந்த 20-ந் தேதி கணவர் அபிஷேக் தன்னுடன் தாம்பத்ய உறவு கொள்வதில்லை என்றும் பிற ஆண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் ஓரினசேர்க்கையாளரான அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் இதற்கு அவரது பெற்றோரும் உடந்தை என்றும் மல்லேசுவரம் போலீசில் புகார் செய்தார். மேலும் தனது கணவர் ஓரின சேர்க்கையாளர் என்பதற்கான ஆதாரமாக தனது வீட்டில் ரகசியமாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய சி.டி.யையும் போலீசாரிடம் சுமா சமர்ப்பித்தார். இந்திய தண்டனை சட்டம் 377 பிரிவின்(இயற்கைக்கு மாறாக உறவு கொள்வது) கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்தார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் பற்றி துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், பல் டாக்டர் சுமா கொடுத்த புகாரின் பேரில் மல்லேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் அபிஷேக்கை கைது செய்து உள்ளனர். அவர் மீது 377 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அபிஷேக்கின் நிலைமையை தெரிந்து கொண்டே, அவரது பெற்றோர் சுமாவுக்கு திருமணம் செய்து வைத்து ஏமாற்றினார்களா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.இதற்கிடையில், சுமா கொடுத்த புகாரின் பேரில் அபிஷேக் மீது 377 சட்டப்பிரிவு கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சட்ட விதிப்படி அபிஷேக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், அபிஷேக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு எதிராகவும், அபிஷேக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

செய்திகள்

3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!…

கொழிஞ்சாம்பாறை:-கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 3–ம் வகுப்பு மாணவி யாசீன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். சம்பவத்தன்று அங்குள்ள தனி அறையில் இருந்த கம்ப்யூட்டரில் மாணவி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது யாசீன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் மாணவி அலறி சத்தம் போட்டார். கண்ணாடி அறை என்பதால் மாணவியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. யாசீன் பிடியில் இருந்து தப்பி வந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயாரிடம் கூறி அழுதார். அதிர்ச்சியடைந்த தாயார் இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யாசீனை கைது செய்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்திகள், முதன்மை செய்திகள்

இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை: போலீசார் அறிவிப்பு!…

சென்னை:-சென்னையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்கும் விதிமுறைகள் பற்றி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- * உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன் படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்குமேல் ஒளி எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. * பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்க வேண்டாம். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் நிலையங்கள் அருகேயும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். * பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசுகள் அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். * மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. * பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால், வெடியினால் டப்பாக்கள் தூக்கி வீசப்படலாம். அதனால் விபத்துகள் நேர வாய்ப்புள்ளது. * குடிசை பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும், ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது. * எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. * ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்படியில் (சமையலறையில்) வைத்து உலர்த்தக்கூடாது. * பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது. * எந்த காரணத்தை கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வாணவெடிகளை அல்லது பட்டாசுகளை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். * பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகை பிடிப்பதோ, சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது. * பட்டாசு விற்கும் கடைகள் அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. * பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ, பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகில் அல்லது கடையிலோ உபயோகிக்கக்கூடாது. * பட்டாசுகளை போதுமான இடைவெளி விட்டு கொளுத்த வேண்டும். * கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடித்தல் கூடாது. ஏனெனில் அவை பயத்தின் காரணமாக மிரண்டு ஓடும்போது, வாகன ஓட்டுனர்கள் மீது மோதி விபத்து ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.உறவினர் ஒருவர் போலீஸ்காரராக இருப்பதால் காக்கி சட்டை அணிந்து அவர் மிடுக்குடன் நடந்து செல்வதை பார்க்கும் போதெல்லாம் அவரை அழைத்து நானும் ஒருநாள் இப்படி போலீஸ் அதிகாரியாக வருவேன் என்பான்.அவரும் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். உன்னால் நிச்சயம் போலீஸ் அதிகாரியாக வரமுடியும். முதலில் நன்றாகபடி என்று பெற்றோரும் உற்சாக மூட்டினார்கள். மனதில் துளிர்விட்ட போலீஸ் அதிகாரி கனவுடன் அந்த இளந்தளிர் தனது பள்ளி பயணத்தை தொடர்ந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென்று உடல் நலம் பாதித்த சாதிக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவனை ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் நொறுங்கி போனார்கள். தங்கள் அன்பு மகனை மரணம் நெருங்கி கொண்டிருப்பதை நினைத்து தவித்தார்கள்.எத்தனை ஆசை…? எத்தனை கனவுகள்…? அத்தனையும் கானல் நீராகி விட்டதே என்று மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது. தனது வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சாதிக்கிடம் அவனது கடைசி ஆசையை மருத்துவர்கள் கேட்டனர்.அப்போது அவன் சொன்ன வார்த்தைகள் ‘நான் போலீஸ் கமிஷனராக ஆசைப்பட்டேன். ஆனால்….’ என்று அவன் முடிப்பதற்குள் அருகில் நின்ற மருத்துவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது.இவ்வளவு அற்ப ஆயுளில் அவன் வாழ்க்கை பயணம் முடியும் என்று யார் கண்டது? மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று! அதுதானே உண்மை. முடியப்போகும் சாதிக்கின் வாழ்க்கையில் அவனது கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஐதராபாத்தில் இயங்கும் ‘மேக் ஏ விஷ்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு சாதிக்கின் நிலைமையும், அவனது கடைசி ஆசையையும் விவரித்தனர்.உடனே தொண்டு நிறுவனத்தினர் போலீஸ் கமிஷனரை அணுகி விவரத்தை கூறினார்கள்.அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி முன்வந்தார். சிறுவன் சாதிக்குக்கு போலீஸ் சீருடை, தொப்பி தயாரானது. நேற்று காலை 10 மணி… கமிஷனராக பதவி ஏற்க சீருடை அணிந்து வீட்டில் சாதிக் தயாராக இருந்தான்.சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய போலீஸ் வாகனம் சாதிக் வீட்டு முன்பு வந்து நின்றது.காவலர் ஒருவர் கார் கதவை திறந்து விட மிடுக்காக காரில் ஏறி அமர்ந்தான் சாதிக். ஐதராபாத் நகர வீதியில் கமிஷனராக… மனதுக்குள் கற்பனையில் மிதந்தபடி சாதிக் பயணித்தான்.கமிஷனர் அலுவலகம் வந்து இறங்கியதும் காவலர் ஒருவர் ‘சல்யூட்’ அடித்து வரவேற்றதும் பதிலுக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதையை ஏற்றுக் கொண்டான்.போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந்த போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி பூங்கொத்து கொடுத்து சாதிக்கை வரவேற்றார். பின்னர் கமிஷனரின் இருக்கையில் சாதிக்கை அமர வைத்தனர். அந்த அறையில் நிரம்பி இருந்த நிருபர்களும் புதிய கமிஷனரை மகிழ்விக்க புதிய கமிஷனர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று கேள்வி கேட்டனர்.அதற்கு சற்றும் தாமதிக்காமல் ரவுடியிசத்தை ஒழிப்பேன். சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படும். போக்குவரத்து சீராக இருக்கும். நாள் முழுவதும் காவலர்கள் விழிப்புடன் இருப்பார்கள். ஈவ்–டீசிங்க்கு இடம் கிடையாது என்று படபடவென்று பதிலளித்தான். அதோடு உதவி கமிஷனர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் இந்த விசயங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டான்.பின்னர் தயாராக வைத்திருந்த சில கோப்புகளிலும் கையெத்திட்டான். அதை தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தை சுற்றி காட்டினார்கள்.ஒரு நாள் கமிஷனராக வலம் வந்த சாதிக்கின் உள்ளத்தில் தனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதற்கான பூரிப்பு. சந்தோசத்தில் சிரித்து கொண்டே அனைவரிடமும் உரையாடினான்.இதை பார்த்து கொண்டிருந்த ஒவ்வொருவரின் இதயமும் கண்ணீர் வடித்தது. எத்தனை ஆசை கனவுகள்… இந்த சிறுவனுக்கு? அநியாயமாய் பாதியிலே கருகி போகிறதே…வாழும் காலமாவது வசந்த காலமாக இருக்கட்டும் என்று பொங்கி வரும் கண்ணீரை அடக்கி கொண்டு ஒவ்வொருவரும் அவனை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வயதில் எவ்வளவு பெரிய கனவு கண்டுள்ளான். கடவுள் அவனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை. எங்களால் முடிந்த இந்த உதவியின் மூலம் அவனுடைய ஆசையை நிறைவேற்றிய ஆத்ம திருப்தி எங்களுக்கு என்றார் கமிஷனர் மகேந்திர ரெட்டி.

Scroll to Top