செய்திகள்

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?

சென்னை மாநகர காவல்த்துறை ஒரு வழியாக விழித்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது “இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், மாணவர்களே ஆனாலும் சிறைதான்” என்று கடும் தொனியில் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…

NIA (National Investigation Agency) என்று சொல்லப்படக் கூடிய தேசிய புலனாய்வு முகமைக்கு வலுசேர்க்கும் சட்டத் திருத்தம் அது.

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை

சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.? – சீமான் சவால்

Federer
செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

100-வது பட்டத்தை வென்றார், பெடரர்

ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து ) 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சட்சிபாசை (கிரீஸ்) எதிர் கொண்டார். விறு விறுப்பான இந்த மோதலில் முன்னால் நம்பர் ஒன் நட்சத்திரமான பெடரர் 6-4.6-4 என்ற நேர் செட் கணக்கில் சிட்பாசை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார் . அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் 4- வது சுற்றில் சிட்பாசிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக்கொண்டார். துபாய் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெடரர் வெல்வது இது 8-வது முறையாகும். வாகை சூடிய அவருக்கு ரூ.4 கோடியும் 2-வது இடத்தை பிடித்த சிட்சிபாசுக்கு ரூ. 2 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. 22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரருக்கு ஒற்றையர் பிரிவில் இது 100-வது சர்வதேச பட்டமாக அமைந்தது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் மகுடமும் அடங்கும். இதன் மூலம் ஓபன் எரா வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் இணைந்து தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து)இந்த மைல்கல்லை எட்டிய 2-வீரர் என்ற பெருமையை 37 வயதான பெடரர் பெற்றார். இந்த வகையில் அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறதா?

அஜித்குமார்-வெங்கட் பிரபு சந்திப்பு தமிழில் இரண்டாம் பாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.எந்திரன்,விஸ்வரூபம்,சிங்கம்,சண்டக்கோழி,சாமி,திருட்டுப்பயலே,வேலையில்லாபட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. அடுத்து சூர்யாவின் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதே போல் அஜித்குமார், அர்ஜூன்,திரிஷா, நடித்து 2011-ல் வெளியாகி வசூல் குவித்த மங்காத்தா படத்தின இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவை ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர்.இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது ,மங்காத்தா -2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன்.அது மங்காத்தா-2 ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார். இந்த நிலையில் அஜித்குமாரை வெங்கட்பிரபு திடிரென்று சந்தித்து பேசினார்.அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.மங்காத்தா இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் தற்போது இந்தி பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.போனிகபூர் தயாரிப்பில் இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளார்.அந்த படங்களை முடித்துவிட்டு வெங்கட்பிரபு படத்துக்கு வருவார் என்று தெரிகிறது.

செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக் கொண்டாடப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 4ஆம் தேதி, சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குறிப்புகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா மகா சிவராத்தியை முன்னிட்டு கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 4ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள், 5 மணி முதல் பகல் 12 மணி வரை அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். மாலை 6 மணியளவில் , கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவார்கள்.பிரம்மதீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகிய இடங்களில் தீபங்கள் ஏற்ற பாதுகாப்பு கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அன்றைய தினம் இரவு 7.30 மணி, 11.30 மணி, மறுநாள் அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என்று மூலவருக்கு நான்கு கால் பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதேபோல் மூலவர் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள லிங்ககோத்பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும் . மகா சிவராத்திரி அன்று திங்கள் காலை முதல் மறுநாள் காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் கோயில் ராஜகோபுரம் எதிரில் 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகவே சிறப்பு தரிசனம் , அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள்

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிட உள்ளதாகவும் இதற்காக தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுவிட்டன. இதே போன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுவிட்டன .மதிமுக,விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் பெரிய கட்சியாக கருதப்படும் தேமுதிக தற்போது வரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற முயற்சியில் அதிமுகவும் திமுகவும் ஈடுபட்டது.இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Thiyagaraja Bhagavar
செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள மாயவரத்தில்( தற்போது மயிலாடுதுறை) பிறந்தார். இவர் தன்னுடைய 16 வந்து வயதில் மேடைக்கச்சேரியை அரங்கேற்றினார்.4மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. ” தியாகராஜன் ஒரு பாகவதர்” என்று விழாவில் மிருதங்க வித்துவான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார் அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்து கொண்டது. திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக (1926) நடித்தார்.அந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக (1934) வந்தது.படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார். 1944ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி 3தீபாவளி கண்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. தமிழ்த் திரைப்படத்துறையில் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வது வயதில் (1959) மறைந்தார். இன்று அவருடைய பிறந்த நாள்.மண்ணை விட்டு மறைந்தாலும் திரையுலகில் நீங்காமல் இடம் பிடித்த ஜாம்பவான்!

MS Subbu lakshmi
செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்

2011-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான, பல்வேறு கலைப் பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர் களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது இயல் பிரிவு: பாரதி விருது பெறுபவர்கள் 1) புலவர் புலமைப்பித்தன் 2) கவிஞர் சுப்புஆறுமுகம் 3) எழுத்தாளர் சிவசங்கரி. இசை பிரிவு : எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெறுபவர்கள் 1) எஸ்.ஜானகி 2) பாம்பே சகோதரிகள் லலிதா 3) சரோஜா 4) டிவி.கோபாலகிருஷ்ணன் 5) சசிரேகா 6) மாலதி உன்னி மேனன் பரதநாட்டியம் :பாலசரஸ்வதி விருது பெறுபவர்கள் 1) வைஜயந்தி மாலா 2) சி.வி.சந்திரசேகர் 3) தனஞ்செயன் கலைமாமணி விருது லேனா தமிழ்வாணன் , வாசுகி கண்ணதாசன் நடிகர்கள்: 2017-ம் ஆண்டிற்கான விருதை பெறுபவர் விஜய் சேதுபதி மேலும் கார்த்தி, பிரசன்னா, பொன் வண்ணன், பிரபுதேவா, சரவணன், ராஜசேகர், ஆர்.ராஜிவ்,பாண்டு, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ரா லட்சுமணன். நகைச்சுவை நடிகர் சந்தானம், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சிங்கமுத்து பாடகர்கள்: கானா பாலா, கானா உலகநாதன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, நாட்டுப்புற கலைஞர்கள் பரவை முனியம்மா, வேல் முருகன் இயக்குனர்கள் ஹரி, டி.பி.கஜேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பவித்ரன் நடிகைகள்: பிரியாமணி, குட்டி பத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி, பழம் பெரும் நடிகை பி.ஆர்.வரலட்சுமி, சாரதா, நிர்மலா பெரியசாமி, பரதநாட்டிய கலைஞர் பிரியா முரளி, நடிகர் சிவன் சீனிவாசன் உட்பட 201 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. அரசு விழாவில் முதல்வர் பழனிச்சாமி வழங்க உள்ளார். விருதுகளுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

செய்திகள், பரபரப்பு செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா!

பெண் பத்திரிகயாளர்ளின் பாலியல் புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல துறை பிரபலங்கள் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் கலக்கம் அடைந்துள்ளனர். மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் மாட்டியிருக்கிறார்.பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். அவர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர் . ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் எந்த பதிலையும் அளிக்காமல் மவுனம் காத்துகொண்டு இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் , அரசு பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில் டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என கூறினார். இன்று மாலை அவர் தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார். “தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன்” என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top