தமிழ்ப்பேழை,முதன்மை செய்திகள் தென்னாட்டின் மொழியினம் பாகம்-5

தென்னாட்டின் மொழியினம் பாகம்-5

தென்னாட்டின் மொழியினம் பாகம்-5 post thumbnail image

துளு:

இதற்குக் கிரந்தத்தை ஒட்டிய எழுத்து முறை உண்டு .தனி இலக்கிய வளம் இல்லை.கிறித்துவப் பாதிரிமார்கள் முதன் முதலில் இம்மொழியில் நூல்கள் எழுதினர் .ஆனால் இவை கன்னட எழுத்துக்களில் எழுதி அச்சிடப்பெற்றன.

கருநாடக மாநிலத்தை அடுத்துள்ள கல்யாணபுரி, சந்திரகிரி என்னும் இரண்டு ஆறுகளுக்கிடையேயுள்ள பகுதியில் வாழும் மக்கள் இம்மொழி பேசுகின்றனர். பிரிகெல் என்னும் ஐரோப்பிய அறிஞர் முதன் முதலாக இம்மொழிக்கு இலக்கணம் எழுதினார்.

குடகு:

இம்மொழிக்கும் எழுத்தும் இலக்கிய வளமும் இல்லை. கன்னட மொழி பேசும் பகுதியை அடுத்துள்ள போதிலும் தமிழோடும் மலையாளத்தோடும் உறவு உடையதாக விளங்குவதாக டாக்டர் மோக்லிங் என்ற ஜெர்மனி அறிஞர் கூறுகிறார் .இது பழங்கன்னடத்திற்கும் துளுவிற்கும் இடைப்பட்டது என்பது கால்டுவெல் கருத்து. மேஜர் கோல் என்பவர் இதன் இலக்கணத்தையும் சில பாட்டுக்களையும் எழுதி வெளியிட்டு உள்ளார்.

கோத மொழி:

நாகரிகத்தில் பின் தங்கியுள்ள நீலகிரியில் வாழும் மக்களே இம்மொழியைப் பேசுகின்றனர்.

தோத மொழி:

நீலகிரிமலையில் வாழும் பழங்குடி மொழி இது. இம்மொழி பேசும் மக்கள் நாகரிகத்தில் பின் தங்கியவர்கள். இம்மொழி பேசுவோர் தொகை மிகவும் குறைவு.

படக மொழி:

இம்மொழி கன்னடத்தின் கொச்சைக் கிளை மொழி போன்றது.நீலகிரி மலையில் வாழ்வோர் பேசுவது.

கோந்தி மொழி:

மத்திய இந்தியாவில் சில மலைகளிலும் காடுகளிலும் வாழும் மக்கள் பேசும் மொழி.

கூ,குவி,கோண்ட்:

ஒரிசாவின் குன்றுகளில் வாழும் மக்கள் பேசும் மொழி.

தொடரும்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி