உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1756ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார்.
இவர் 1825ஆம் ஆண்டு மனிதனையும் , குதிரையொன்றையும் காட்டும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்தார்
இவர் இருட்டறை என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் பிம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களி உருவாக்கினார்.
பிறகு 1824ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாக சொல்லப்படுகிறது.1829ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவருடன் சேர்ந்து பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினார்.
2002ஆம் ஆண்டில் இவர் 1825ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 4,50,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.
ஒளிப்படவியல் துறையின் முன்னோடி ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் தனது 68வது வயதில்(1833) மறைந்தார்.