வில்லாதி வில்லன்!

வில்லாதி வில்லன்! post thumbnail image

எம்.என்.நம்பியார்:

  • மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதை எம்.என் .நம்பியார் என்று சுருக்கமாக அழைக்கிறோம். இவர் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார்.தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார் . குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்)எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.
  • தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால் ,தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக்குழுவில் சேர்ந்து சேலம் ,மைசூர் எனச் சுற்றினார் .ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை.நாடகக் கம்பனியின் சமையலறையில்உதவியாளராகவே இருந்தார்.வேடம் போட்டால் தான் சம்பளம் .இலவசச் சாப்பாடும் ,படுக்க இடமும் கிடைத்தது.
  • 1935ஆம் ஆண்டு பக்தராம்தாசு என்ற படத்தில் மாதண்ணா என்ற நகைச்சுவை வேடத்தில் நடித்தார் ,இதுவே அவரின் முதல் திரைப்படம் .இப்படத்தில் நடித்ததற்காக 40 ரூபாய் கொடுக்கப்பட்டது.இதற்கு பிறகு பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
  • 1000 படங்களுக்கு மேல் நடித்த இவர் ,தனது நம்பியார் நாடக மனறம் மூலம் இரு நாடகங்களை பலமுறை அரங்கேற்றியுள்ளார். திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி