நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் செய்தார் .அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியா ? என்ற கேள்விக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போதுதான் தெரியும் என்று மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் பதில் அளித்தார்.
தி.மு.க. கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு (இந்திய கம்யூனிஸ்டு-2 , விடுதலை சிறுத்தைகள்-2 ,இந்திய ஜனநாயக கட்சி-1) ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இழுபறி நீடிக்கிறது.