கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தினமும் எழுந்து வருகின்றன.இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தினமும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.அனைத்து தொலைக்காட்சிகளிலும் பேட்டிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன.இந்நிலையில் சின்மயி அம்மாவிடம் இவ்விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டி கண்டது.
இதில் பேசிய சின்மயி தாயார் மிகவும் தடுமாறி பதிலளித்தார்.உண்மைக்கு புறம்பாகவும் சில தகவல்கள் கூறியதாக தெரிகிறது .சின்மயிக்கு எதிராக பல விஷயங்களை அவரே கூறினாராம்.இந்த பேட்டியை எடுத்த பெண் பத்திரிக்கையாளர் மிகவும் லாவகமாக கேள்விகள் கேட்டு சின்மயி தாயாரை திக்குமுக்காட செய்தார்.
இந்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.வெளியான சில நேரத்திலேயே சின்மயியை சமூக வலைத்தளங்களில் அனைவரும் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.இதுகுறித்து ட்வீட் செய்த சின்மயி ” எனது தாயாரை பேட்டி என்ற பெயரில் யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் ” என்று கூறினார் .
இந்நிலையில்,புதியதலைமுறையின் யூடுப் சானலில் இருந்து அந்த வீடியோ தூக்கப்பட்டது.இதனால் இணையவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து புதியதலைமுறை செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனிடம் கேள்வி எழுப்பினர்.ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த சமூக வலைதள வாசிப்பாளர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி ,அதன் ஊழியர்கள் கணக்குகளை குறிப்பிட்டு கேள்விகள் எழுப்ப தொடங்கினர். ஏன் வீடியோ தூக்கப்பட்டது,யாரேனும் அழுத்தம் கொடுத்தார்களா, பணம் பெற்றீர்களா என மக்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர் .
இதனால் டென்ஷன் ஆன புதியதலைமுறை ஊழியர் ஒருவர் போலீஸில் புகாரளிக்க போவதாக கூறி,அனைவரையும் பிளாக் செய்தாராம்.கருத்து சுதந்திரம் குறித்து வாய்கிழிய பேசும் நிருபர்கள் , ஒரு கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என்ன ஊடகம் நடத்துகிறார்கள் என கமெண்ட்ஸ் பறந்தன.இறுதிவரை பதில் வரவில்லையாம்.
ஏற்கனவே வைரமுத்துவை பழிவாங்க பிஜேபி அரசு மற்றும் குறிப்பிட்ட சமூகம் பின்னணியில் வேலை செய்வதாக கூறப்பட்டு வந்தது.இந்த சர்ச்சைக்கு பிறகு இது தான் உண்மையா என சந்தேகம் எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி