செய்திகள்,முதன்மை செய்திகள் புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !! post thumbnail image

அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.இதற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமையம் தான் காரணம்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ,தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இப்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லூபன்

இந்த புயலுக்கு லூபன் என பெயரிடப்பட்டுள்ளது .இது ஏமனில் கரையை கடக்கும்.
வங்கக்கடலிலும் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

அது வங்கக்கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த மண்டலமாக நிலவி வருவதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

2 நாட்களில் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது .மீனவர்கள் யாரும் அரபிக் மற்றும் வங்க கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி