தமிழகம் முழுவதும் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது, நள்ளிரவில் மழை கொட்டத் தொடங்கியது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இன்று அதிகாலையில் சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது, இதனால் சென்னை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.நேற்று திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டத் தொடங்கியது. காற்று, இடி, மின்னல் என மழை அடித்து ஊற்றியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தின் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது .இதனால் விவாசியிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆனால்,சென்னை மக்கள் மழை தீவிரமடைந்துவிடுமோ என பீதியில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி