பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஐ.நாவில் பேசிவிட்டு வந்த அவரை போலீசார் கைதுசெய்தனர் .அதன்பிறகு அவர் மீது பல்வேறு வழக்குகள் போட்டு போலீசார் சித்தரவதை செய்வதாக அவரது அமைப்பினர் குற்றம் சாட்டினார் .வேலூர் சிறையினில் கடந்த ஒன்றரை மாதமாக உள்ள அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், இரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி சிறையில் மயங்கி விழுந்தார். 24ஆம் தேதி காலை போலீசார் அவரை வேலூர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.
அவர் வேலூர் சிறை சென்று இன்றோடு 52 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாமீன் பெற்றார் இந்த நிலையில் அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது. திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளுக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை பெறப்பட்டது. அந்த ஆணை வேலூர் சிறையில் சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்டார் இந்த நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வாய்ப்புள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி