சென்னை கோயம்பேட்டில் அருகே மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் .மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வசித்து வந்தனர் .நேற்று அதிகாலை மிதிவெட்டு ஏற்பட்டுள்ளது. புழுக்கம் தாங்க முடியாமல் ஏசியை ஜெனரேட்டருடன் இணைத்து பயன்படுத்தியுள்ளார்.இன்வெர்டர் உடன் ஏசியை இணைத்துள்ளார்.
இன்று காலை வெகு நேரம் ஆகியும் இவர்கள் வீடு பூட்டியே இருந்துள்ளது.புகையும் வீட்டிலிருந்து வந்துள்ளது.கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.அங்கே அறையில் சரவணன், கலையரசி, கார்த்திகேயன் ஆகியோர் பலியாகியிருந்தனர் . மின் கசிவு ஏசியில் ஏற்பட்டதால் மூச்சுத் திணறி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. அதிகாலை 5 மணிக்கு மின் இணைப்பு வந்த நிலையில் இன்வெர்ட்டரில் இயங்கி வந்த ஏசியில் அதிக லோடு தாங்காமல் மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி