இந்தோனேசியாவுக்கு நிவாரணமாக 1 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது கூகிள் நிறுவனம்.சமீபமாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர்.மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.நாடே சீர்குலைந்து போயுள்ளது. இதற்காக சர்வதேச உதவியை எதிர்பாப்பதாக இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோ கூறியிருந்தார்.இந்தோனேஷியாவுக்கு உதவிக்கரம் நீட்ட ஐ.நா.வும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதனால் பல்வேறு தரப்பில் இருந்து இந்தோனேசியாவுக்கு உதவிகள் குவிந்தவண்ணம் உள்ளன.அதன் ஒரு பகுதியாக கூகுளை நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.இதனை அந்நிறுவனத்தின் சிஈஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
இந்தியா உதவி
இந்தோனேசியாவுக்கு இந்தியாவும் உதவ முன்வந்துள்ளது.பிரதமர் மோடி இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோவுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.இந்தோனேசியாவுக்கு தேவையான உணவு,பொருட்கள்,பணம் இந்தியாவின் சார்பாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி