விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டினர். இதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர். காந்தி ஜெயந்தி அன்று நடந்துள்ள இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், அரசின் விவசாய கொள்கைக்கும் எதிராக விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தினர் . கடந்த செப்டம்பர் 23ம் தேதி இந்த பேரணி தொடங்கியது. ஹரித்வாரில் தொடங்கிய இந்த பேரணி நடைபயணமாக டெல்லியில் உள்ள கிசான் காட் என்ற பகுதியில் இந்த பேரணி முடிவடைய இருந்தது.ஒரு வாரமாக நடக்கும் இந்த பேரணி இன்று காலை வரை மிகவும் அமைதியாகவே நடந்தது.இந்த பேரணி இன்று டெல்லிக்குள் நுழையும் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட 5000க்கும் அதிகமான விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
பல விவசாயிகள் லத்திகளால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பலர் கடந்த இரண்டு நாட்களாக சாப்பிடாமல், நடைபயணமாக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி