மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படவுள்ளது .இதற்கான வேலைகள் ரகசியமாக நடைபெற்றுவருகின்றன. நெடுவாசலில் பெரும் மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு கைவிடப்பட்ட இந்த திட்டம் ,தமிழகத்தில் வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்படவுள்ளது.அதில் டெல்ட்டாவும் அடக்கம்.இங்கே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா நிறுவானம் தான் ஹைட்ரோ கார்பன் எடுக்கவுள்ளது.
மொத்தம் 55 இடங்களில் இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது.அதில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் தான் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது.அதில் இரண்டு இடங்களை வேதாந்தா நிறுவனமும்,ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் எடுக்கின்றன.இதற்காக நாகை மாவட்டத்தில் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அறிவுப்பு விரைவில் வரும்.வேதாந்தா குழுமம் மத்திய அரசுடன் ரூ.3934 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது .இதுகுறித்து மிக பெரிய அளவில் பிரச்சனை வரும் என தெரிந்து ஏன் அனுமதி வழங்கப்பட்டது என்று தெரியவில்லை.இதனால் மக்கள் அதிர்ச்சியும் ,வேதனையும் அடைந்துள்ளனர் .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி