சென்னையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் புதிய விமான நிலையம் வரவுள்ளது.
மேலும் முதல்வர் கூறுகையில் ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.மின்வெட்டு இல்லை.தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது.தமிழகம் முழுவதும் எம்ஜியார் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இது ஆடம்பர விழா கிடையாது. மக்கள் நன்மைக்கான விழா.அ.தி.மு.க அரசு செயல்படாத அரசு என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் தமிழக அரசு பல துறைகளில் சாதனைகள் படைத்து விருது வாங்கி வருகிறது.கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும்.சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ.417 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். ரூ.100 கோடி மதிப்பில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம் உருவாக உள்ளது “என்று கூறினார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி