சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு வந்தது .பலகாலமாக இந்த நடவடிக்கை வாடிக்கையில் உள்ளது .இதனை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.அவ்ழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்.13 தேதி அன்று மாற்றப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? உள்ளிட்ட 5 கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டது.இதுகுறித்து அரசியல் சாசன அமர்வு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடைபெற்றது.
கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட வழக்கில்,இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்பின் படி ” பெண்கள் மீது பலகாலமாக பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது , ஆணும் பெண்ணும் சமம்.வழிபாட்டிலும் இது சமம் .அதன்படி சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம்.அதனை தடுப்பது சட்டவிரோதம் “என தீர்ப்பளித்தார் .
தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர் .ஆனால் நீதிபதி இந்து மஹ்லோத்ரா மாறுபட்ட கருத்தினை எழுதியுள்ளார் .சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கேரள அரசு வரவேற்பு
தெரிவித்துள்ளது .பெண்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் ,தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்வோம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் அறிவிதுள்ளார்
</டிவி>
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி