பாரத பிரதமர் மோடிக்கு மற்றும் பாஜகவுக்கு எதிராகவும் இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .ஊழலற்ற ஆட்சி ,வெளிப்படையனய ஆட்சியென பாஜகவினர் தினம் கூறி வந்தாலும்.அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தினம் தினம் அதிகரித்து வருகின்றன .சமீபமாக ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .இந்நிலையில் பிரதமர் மோடியின் ஊழல்கள் என பட்டியலிட்டு ஒரு இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அந்த இணையதளத்தின் முகவரி corruptmodi.com ஆகும் .அதில் மோடி அரசின் ஊழல்கள் என A-Z கட்டுரைகள் பட்டியலிடபட்டுள்ளன .இணையத்தளத்தில் நுழைந்தவுடன் ரபேல் ஊழல் வீடியோ நம்மை வரவேற்கிறது .காங்கிரஸ் கட்சி உருவாக்கிய சில வீடியோக்களும் உள்ளன .X,Y,Z எனும் எழுத்துக்களுக்கு கூட ஊழல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .அதானி நில ஊழல்,நிலக்கரி ஊழல்,மீன்பிடி ஊழல்,எடியூரப்பா நில ஊழல் ,பிட் காயின் ஊழல் ,பூகம்ப நிவாரண ஊழல் என மொத்தம் 26 ஊழல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .
இது காங்கிரஸ் இணையதள குழுவின் வேலை என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர் .அந்த Domain name விபரம் சேகரிக்கயில் அது அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது .அது தவிர வேறு எந்த விபரமும் தெரியவில்லை .காங்கிரஸ் மற்றும் பாஜக இணையதள அணிகளுக்கு இடையேயான போட்டியாக இது சமூகவலைத்தளங்களில் பார்க்கப்படுகிறது .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி