அதிருப்தி
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ட்வீட்டில், “சண்டே டைம்ஸ் செய்தி அதிருப்தியளிக்கிறது. அடிப்படை இல்லாத செய்தி அது. இந்தியா-பிரிட்டன் நடுவே நல்ல உறவு உள்ளது. இரு தரப்புக்கும் வசதியான தேதியை முடிவு செய்யதான் தாமதமாகி வருகிறது. ஆலோசனை கூட்டம் நடைபெறுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் அமைச்சர்
இந்த ட்வீட்டிற்கு வில்லியம்சனும் பதிலளித்துள்ளார். நானும் இக்கூட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு நோக்கியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம், இரு அமைச்சர்கள் நடுவேயான சந்திப்பு குறித்த யூகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்தியாவின் மதிப்பு
முன்னதாக சண்டே டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில், பாதுகாப்பு துறை பட்ஜெட்டில் அதிக வளர்ச்சி காட்டும் நாடுகளில் ஒன்று இந்தியா. வருடத்திற்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை செலவிடுகிறது. எனவே, வில்லியம்சனின் இந்த நடவடிக்கை, அவரின், மற்றொரு மோசமான செயல்பாடு என்றே தெரிகிறது. இவ்வாறு அந்த பத்திரிகை செய்தி கூறியிருந்தது.
நல்லதே நடக்கும்
பிரிட்டன்-இந்தியா வாரம்’ நிகழ்ச்சியின் நிறுவனர் மனோஜ் லட்வா இதுபற்றி கூறுகையில், வில்லியம்சன் இரு நாட்டு அமைச்சர் மட்டத்திலான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினால் அது சிறப்பானதாக இருக்கும். அதேநேரம், அவ்வாறு சந்திப்பு நடக்காவிட்டாலும், இந்தியர்கள் ஒன்றும் தூக்கத்தை தொலைத்துவிட மாட்டார்கள். அவ்வாறு நம்மை நாம் கேலி செய்ய தேவையில்லை” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி