ஆயுத மோதலில் குழந்தைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், இந்தியா, சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், பிலிப்பைன்ஸ், நைஜீரியா உள்ளிட்ட 20 நாடுகளில் நக்சலைட்கள் தாக்குதலுக்காக குழந்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் குலுக்கல் முறையில் குழந்தைகளை நக்சலைட்கள் தேர்வு செய்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், எத்தனை குழந்தைகள் மாவோயிஸ்ட் அமைப்புக்களில் சேர்ந்தனர் என்பது குறித்த புள்ளி விபரம் அளிக்கப்படவில்லை. ஆனால், குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுகின்றனர், 16 முதல் 18 வயதானவுடன் நக்சல்கள் அவர்களை தூக்கி சென்று விடுவதாக கூறப்படுகிறது. சிஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில், வீட்டில் ஒரு குழந்தையை தங்கள் இயக்கத்திற்கு கொடுத்து விடும்படி அங்கு வசிப்பவர்கள் நக்சல்களால் வற்புறுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி