புதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். மெட்ரோ ரெயில்கள் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.
பாட்னா, லக்னோ, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சில இடங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் கோயம்பேடு, நந்தனம் போன்ற சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இதேபோல் நேபாளத்தின் காத்மாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. எனவே, அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி