இவர் ராஜபக்சே அரசில் அதிகாரம் மிக்க ராணுவ மந்திரியாக இருந்தார். ராஜபக்சே மீதும் ஊழல் தடுப்பு கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் கமிஷன் முன்பு தான் ஆஜராக முடியாது என மறுத்து விட்டார்.கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பசில் ராஜபக்சேவை பார்க்க வந்த மகிந்த ராஜபக்சே சிறிசேனா அரசு மீது குற்றம் சாட்டினார். தனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் வழக்குகளில் சிக்க வைத்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்தார்.இந்நிலையில் அவரது மனைவி ஷிரந்தியின் வங்கி கணக்குகளும் சோதனையிடப்பட உள்ளன. சிரிலிய சவிய வங்கியில் ஷிரந்தி பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன.
அந்த கணக்குகளில் பணம் போடப்பட்டு காசோலைகளை பயன்படுத்தி பல்வேறு வங்கி கிளைகளில் பணமாக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அதற்கான விசாரணைகளை தொடங்க அனுமதி வழங்குமாறு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு வங்கி கணக்குகளை சோதனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி