போஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக உள்ள சுதா சேஷாத்ரி இது குறித்து கூறுகையில், இந்த அமைதி பக்கவாதம் மிகுந்த கவலையளிக்கிறது. இதன் காரணமாக ஒருவர் பைத்தியமாக கூட மாற வாய்ப்புள்ளது என்றார். காற்றில் பரவும் பி.எம்.2.5 என்ற நுண்ணிய மாசு, மனித தலைமுடியின் தடிமனை விட 30 மடங்கு குறைவான தடமனை உடையது. மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் மரத்தை எரிப்பதால் வெளியாகும் புகை ஆகியவற்றில் வெகுவாக காணப்படும் இந்த பி.எம். 2.5 மாசானது, நுரையீரலின் ஆழத்திற்கே செல்லக்கூடியது. கடந்த காலங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்ததில் பலரும் இந்த பி.எம். 2.5 மாசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் மட்டும் ஆண்டு தோறும் 29000 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி