செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!… post thumbnail image
காட்மாண்டு:-நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 110 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதன் பாதிப்பு இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் இருந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

நேபாளத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காரா டவர் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. பல வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்து இடியும் நிலையில் உள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே நேபாள அதிபரை தொடர்புகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி, நிலநடுக்கத்தின் பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

காட்மாண்டுவின் மையப்பகுதியில் உள்ள தர்காரா டவர் இடிபாடுகளில் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேபாளத்தில் வாழும் இந்தியர்களை பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ள தலைநகர் காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் 24மணி நேர தொலைபேசி தொடர்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி