சென்னை:-மேகா, டார்லிங் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சிருஷ்டி. இவர் தற்போது விஜய் வசந்த் ஜோடியாக அச்சமின்றி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை சென்னையில் படமாக்கியுள்ளனர். இதில் ஹீரோ, ஹீரோயினை இழுத்து கொண்டு ஓடுவது போல் காட்சியாம்.
மிகவும் சிரமமான காட்சி என்பதால் சிருஷ்டிக்கு டூப் போடலாம் என கூற, அவர் மறுத்து விட்டராம். இந்த காட்சியை படமாக்கும் போது சிருஷ்டி கீழே விழுந்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டதாம். பின், அங்கேயே முதலுதவி எடுத்து கொண்டு மீண்டும் நடித்து கொடுத்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி