அடுத்து வந்த ஹபீஸ் இரண்டு ரன்களில் ஏமாற்ற 3-வது விக்கெட்டுக்கு அசார் அலியுடன் ஹரிஸ் சோகைல் ஜோடி சேர்ந்தார். அசார் அலி சிறப்பாக விளையாடி சதம் (101) அடித்தார். சோகைல் அரை சதம் (52) அடித்தார். இவர்கள் இருவரும் அவுட் ஆகும்போது பாகிஸ்தான் 39.2 ஓவரில் 207 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக பாகிஸ்தான் 49 ஓவரில் 250 ரன் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆனது. பின்னர் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் தமீம் இக்பால், சௌம்யா சர்கார் ஆகியோர் நங்கூரம் பாய்த்த மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்கள். இதனால் வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 25.3 ஓவரில் 145 ரன்கள் சேர்த்தது. தமீம் இக்பால் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மெக்முதுல்லா 4 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு சர்கார் உடன் முஷிபிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. சர்கார் 127 ரன்களும், ரஹிம் 49 ரன்களும் எடுத்து வங்காள தேசத்தை 39.3 ஓவரில் 251 ரன்கள் எடுத்து வெற்றிப் பெறச் செய்தனர். இந்த வெற்றியால் பாகிஸ்தானை 3-0 என வங்காள தேசம் ஒயிட் வாஷ் செய்தது. கதம் அடித்த சர்கார் ஆட்ட நாயகனாகவும், தமீம் இக்பால் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி