லண்டன்:-இந்த உலகில் நாடு கடந்து செல்லும் ஒருவனின் அடையாளமாக இருப்பது அவனது பாஸ்போர்ட்டே, விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு போகும் வசதி, பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம், பாஸ்போர்ட் கிடைப்பதற்காக ஆகும் நேரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் தலைசிறந்த 50 நாடுகளின் பாஸ்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த ‘கோ யூரோ’ என்ற பயண ஒப்பீட்டு இணையதளம் பட்டியலிட்டுள்ளது.
52 இலவச-விசா நாடுகள், 1510 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த 87 மணி நேரத்திற்குள் கிடைக்கும் இந்திய பாஸ்போர்ட்டுக்கு இந்த பட்டியலின் இறுதியில் 48-வது இடம் கிடைத்துள்ளது.
174 இலவச-விசா நாடுகள், 2700 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த ஒரு மணி நேரத்திற்குள் கிடைக்கும் சுவீடன் நாட்டு பாஸ்போர்ட்டுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. பின்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி