நியூயார்க்:-உலகின் மிகவும் அழகான பெண்மணி-2015 ஆக ஹாலிவுட் கவர்ச்சி நடிகை ஸான்ட்ரா புல்லக்கை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல ‘பீப்புல்’ பத்திரிகை தேர்வு செய்துள்ளது. 50 வயதாகும் ஸான்ட்ரா புல்லக்கின் விசேஷ படங்களை வெளியிட்டு உலகின் மிகவும் அழகான பெண்மணி-2015 ஆக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒரு சிறப்பு கட்டுரையையும் அந்த பத்திரிகை தீட்டியுள்ளது.
1987-ம் ஆண்டில் சினிமாவில் நடக்க தொடங்கிய ஸான்ட்ரா புல்லக், ‘ஸ்பீட்’ உள்ளிட்ட சுமார் 50 ஹாலிவுட் படங்களிலும், சில ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 1990-2000 ஆண்டுகளுக்கிடையில் புகழேணியின் உச்சத்தில் இருந்த இவருக்கு ஏராளனான ஆண் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது, குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி