நியூயார்க்:-சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக கூகுள், தனது தேடல் இடத்திற்கு மேலே (டூடுல்) உலகம் உருள்வதைப் போல அனிமேஷன் செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பூமி தினம் ஏப்ரல் 22ம் தேதியன்று ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம். கடந்த 1970ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த பூமி தினம், இந்த ஆண்டு 192 நாடுகளில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி