ஜெருசலேம்:-இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் அருகேயுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான ஒரு விமானம் 181 பயணிகளுடன் இன்று செக் நாட்டின் தலைநகரான பிராகுவே நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.
ஓடுபாதையில் சென்று உயரக் கிளம்பியபோது அந்த விமான சக்கரத்தின் ஒரு டயர் துண்டுதுண்டாக ஓடுபாதையில் கிடப்பதை பார்த்த பென் குரியன் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விமானியை தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மாற்றுச்சக்கரம் பொருத்திய பின்னர் அந்த விமானம் பிராகுவே நகருக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி