அதன்படி வரும் மேம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவருக்கு பத்து வருட சிறை தண்டனை வரை கிடைக்கும். முன்னதாக அரசு தரப்பு தனது இறுதி வாதத்தின் போது, விபத்து நடந்தபோது காரை சல்மான்கான் ஓட்டவில்லை. அவரது டிரைவர் தான் காரை ஓட்டினார் என்ற சல்மானின் வாக்குமூலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விபத்து நடைபெற்ற போது காருக்குள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 4வது நபர் யாரும் காருக்குள் இருக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத் தனது வாதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் கடந்த 12 வருடங்களாக 4வது நபர் காருக்குள் இருந்ததாக தெரிவிக்காமல், தற்போது தெரிவிப்பது ஏன் என அவர் கேள்வியெழுப்பினார். ஆனால் சல்மானின் தரப்பு தனது இறுதி வாதத்தின் போது, அவர் காரை ஓட்டவில்லை என தொடர்ந்து வாதம் செய்தது. இந்த வழக்கில் ஆதாரங்களும், சாட்சியங்களும் சல்மானுக்கு எதிராக உள்ளதால் அவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி