சென்னை:-கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடிகர் அஜித்தின் மகன் குட்டித்தல பிறந்தார். இதை அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வாழ்த்துக்கள் கூறி இந்திய அளவில் குட்டித்தலயை டிரண்டாக்கி தங்கள் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர். இந்நிலையில் குட்டித்தலக்கு பெயர் வைக்கும் விழா விரைவில் நடைபெறும் என்றும், அனேகமாக அஜித் பிறந்த நாளில் குட்டித்தலக்கு பெயர் வைக்கப்படலாம் என்றும் கோடம்பாக்கத்தில் செய்திகள் பரவி வருகிறது.
அஜித் இதுவரை எந்த சினிமா விழாவுக்கும் போகாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் குட்டித்தலயின் பெயர் சூட்டும் விழாவிற்கும் குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைக்க முதலில் முடிவு செய்திருந்தாராம். ஆனால் ஷாலினியின் விருப்பத்திற்கிணங்க கோலிவுட்டின் முக்கிய வி.ஐ.பிக்களையும் அவர் பெயர் சூட்டும் விழாவிற்கு அழைப்பார் என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படுகிறது. யார் யாரையெல்லாம் கூப்பிடலாம் என்று அஜித் – ஷாலினி போட்ட பட்டியலில், நடிகர் விஜய் பெயர் முதலில் உள்ளது என்கிறது அஜித்தின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி