லண்டன்:-லண்டன் தேசிய கிளப் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிளாடிஸ் கிளப் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நான்ட்விச் அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய கிளாடிஸ் அணி 79 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் நான்ட்விச் கிளப் பேட்ஸ்மேன் 21 வயதான லிம் லிவ்விங்ஸ்டோன் 138 பந்துகளில் 350 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதில் 34 பவுண்டரியும், 27 சிக்சரும் அடங்கும். எல்லாவகையான ஒருநாள் போட்டிகளிலும் ஒரு இன்னிங்சில் வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிகிலேஷ் சுரேந்திரன் ஆட்டம் இழக்காமல் 334 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி