தனது காதலி குறித்து ஜிங் கூறுகையில், 62 வயதை எட்டியவளாக இருந்தாலும் எனது காதலி 40 வயதுடையவள் போல் இருப்பாள். அவள் தான் என் முதல் பெண் தோழி. அவள் தான் என் முதல் காதலி. ஒவ்வொரு நாள் இரவும் பகலும் அவளை பற்றியே யோசிப்பேன் என்றார். இப்படி மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்ற நிலையில், திடீரென ஒரு நாள் அவள் காணாமல் போனாள். எங்கு தேடியும் அவளை காணவில்லை. எதற்காக என்னை விட்டு பிரிந்து சென்றாள் என்றாள் என்பதும் எனக்கு புரியவில்லை என மேலும் கூறினார்.
தனது வேலையை ராஜினாமா செய்த ஜிங், ஹுனான் மாகாணத்தில் உள்ள அப்பெண்ணின் சொந்த ஊரான க்சியாங்டானுக்கு சென்றார். அப்பெண்ணின் வீட்டையும் கண்டுபிடித்தார். ஆனால் அங்கு ஜிங்குக்கு அவமரியாதை தான் ஏற்பட்டது. அப்பெண்ணின் மருமகன் வீட்டை விட்டு ஜிங்கை வெளியேற்றியதுடன், தனது மாமியார் பற்றி எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டார். இந்நிலையில் தனது தேடும் யுக்தியை மாற்றிய ஜிங், அப்பெண்ணின் முன்னாள் கணவரை தொடர்பு கொண்டார். அவரிடம் தனது காதலியை இருப்பிடம் ஏதும் தெரியுமா என்று ஜிங் கேட்டபோது, தங்களது விவாரத்து சான்றிதழை காண்பித்த முன்னாள் கணவரோ, ஐயா சாமி. என்னை விட்டுவிடு என தலை தெறிக்க ஓடினார். இந்நிலையில் உள்ளூர் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து விட்டு தனது காதலிக்காக இன்றும் காத்துக்கொண்டிருக்கிறார் ஜிங்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி