புதுடெல்லி:-மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான் கவும் தெரிவித்துள்ளார். மேலும், registered users மற்றும் ஆக்டிவ் யூசர்களுக்கு வித்தியாசமுள்ளதாகவும், இதில் வாட்ஸ் ஆப் தற்போது active users எண்ணிக்கையில் அதிக உச்சத்தை தொட்டு சாதனை புரிந்திருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 60 கோடியை எட்டிய வாட்ஸ்ஆப் ஜனவரி மாதம் 70 கோடியை தாண்டியது. தற்போது 80 கோடியை தொட்டுள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களான டுவிட்டர் (28.8 கோடி), பேஸ்புக் (138 கோடி), இன்ஸ்டாகிராம் (30 கோடி) ஆக்டிவ் யூசர்களை தக்கவைத்துள்ளது. டெக்ஸ்ட், படங்கள், வாய்ஸ் மெசேஜ்கள் மற்றும் ஆப்ஸ்களை இலவசமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்பும் வசதியை வழங்கி வரும் வாட்ஸ்ஆப் சமீபத்தில் வாய்ஸ் காலிங் வசதியையும் அறிமுகப்படுத்தியிருப்பதால் விரைவில் ஸ்கைப் மற்றும் வைபரை விட முந்திச் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி