சென்னை:-நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2011ம் ஆண்டு மிகப் பெரிய ஹிட்டான காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பே விநியோகத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 55 கோடி வியாபாரம் ஆகியுள்ளது. இப்படத்தை லாரன்ஸ் ரூ. 20 கோடியில் செலவு செய்து எடுத்துள்ளார்.
மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மற்றும் இன்றைய மார்க்கெட்டில் பேய் படங்களின் மவுஸ் கருதி படத்தை நீ, நான் என்று போட்டி போட்டு வாங்கியுள்ளனர். ஒரு சில ஏரியாவில் நான்கு, ஐந்து விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ரிலீஸ் ஆகி பி, சி சென்டர் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இன்னும் ஒரு வாரத்துக்கு படம் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி