புதுடெல்லி:-காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து அனுப்பும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
என்னதான் அதி விரைவாக டைப் அடிப்பதற்கு ‘ஆட்டோமேட்டிக் இன்புட்’ தொழில்நுட்பம் இருந்தாலும், நம் கைப்பட எழுதுவதில் உள்ள சுகமே தனிதான். கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய வசதியைப் பயன்படுத்தி, இனி விரல்களால் நீங்கள் நினைக்கும் வார்த்தைகளை உங்கள் இஷ்டத்திற்கு எழுதி அனுப்ப முடியும்.
இதற்கென ஆண்டிராய்டு மொபைல்களுக்காக கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிகேஷனை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த அப்ளிகேஷனின் ஹைலைட்டே தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளில் எழுதலாம் என்பது தான். கூடவே ஸ்மைலிகளையும் வரைந்துக்கொள்ளலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி