ஆண்டிகுவா:-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன், நேற்று ராம்தினின் விக்கெட்டை வீழ்த்தி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான இயன் போத்தமின் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளில் பங்கேற்று 187 இன்னிங்சில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மாறாக இயன் போத்தம் 102 போட்டிகளில் பங்கேற்று 161 இன்னிங்சில் மட்டுமே விளையாடி 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ராம்தினின் விக்கெட்டை அவர் வீழ்த்தி சாதனை படைத்ததும், இப்போட்டியை காண வந்திருந்த ஆண்டர்சனின் குடும்பத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி