இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அது போல டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சிறப்பாக இருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. டெல்லி விற்பனை விலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 62 ரூபாய் 75 காசுகளாக விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் 85 காசுகள் விலை குறைந்து இனி 61 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகும். 51 ரூபாய் 61 காசுகளாக விற்பனையான ஒரு லிட்டர் டீசல் ஒரு ரூபாய் 40 காசுகள் விலை குறைந்து இனி 50 ரூபாய் 21 காசுகளுக்கு விறபனையாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி