அதாவது, இந்த படத்தை தயாரிப்பதற்காக ஆஸ்கார் நிறுவனம் ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.40 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், படம் இன்னும் வெளிவராத நிலையில், ரூ.40 கோடியை செலுத்தாமல் பூலோகம் படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். முழுத் தொகையையும் செலுத்திய பிறகே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நேற்று கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஏப்ரல் 16-ந் தேதி வரை பூலோகம் படத்தை வெளியிட தடை விதித்தும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி