கேள்வி:– தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்துள்ளதே?
பதில்:– அந்த தொழில் அதிபர் யார் என்று சொல்லுங்கள். என்ன தொழில் செய்கிறார் என்று கூறுங்கள். போன் நம்பரையும் தெரியப்படுத்துங்கள். நடிகருடன் இணைத்து பேசாமல் தொழில் அதிபரை மணக்க போகிறேன் என்று சொன்னதில் சந்தோஷம்தான். காரணம் நான் சினிமா நடிகரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். சினிமா தொழிலில் சம்பந்தப்பட்ட யாரையும் மணக்கமாட்டேன்.
தொழில் அதிபரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உண்டு. ஆனாலும் காதல் கீதல் எதுவும் இப்போது இல்லை. திருமணமும் இப்போதைக்கு இல்லை.
கே:– சர்ச்சை கருத்துக்களை சொல்லி எதிர்ப்புக்கு ஆளாகிறீர்களே?
ப:– என் மனதில் இருப்பதை சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறேன். ஆனாலும் சினிமா துறையில் யாருடனும் எனக்கு விரோதம் கிடையாது. எல்லோருடனும் நட்பாகவே இருக்கிறேன்.
கே:– இந்தி படங்களில் நடிப்பீர்களா?
ப:– இந்திக்கு போக விருப்பம் இல்லை. இரட்டை குதிரையில் சவாரி செய்ய விருப்பம் இல்லை.
கே:– முதல் இடத்தை பிடிக்க கதாநாயகிகள் மத்தியில் நிலவும் போட்டி பற்றி…?
ப:– முதல் இடம், இரண்டாம் இடம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் ஹிட்டானால் அந்த நடிகைதான் நம்பர் ஒன். தோல்வி அடைந்தால் முந்தைய வெற்றிகளை எல்லாம் மறந்து ஓரத்தில் ஒதுக்கி விடுவார்கள். என்னை பொறுத்தவரை ஐந்து வருடமாக சினிமாவில் நடிக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை விடவும் அழகான திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பது என் அதிர்ஷ்டம்.
கே:– தெலுங்கில் மூன்று கதாநாயகிகள் படத்தில் நடிக்க இருக்கிறீர்களே?
ப:– மூன்று, நான்கு கதாநாயகிகளுடன் நடிப்பது தவறல்ல. ரசிகர்களும் ஒரு படத்தில் நிறைய கதாநாயகிகள் நடிப்பதை விரும்புகிறார்கள். நான் திறமையான டைரக்டரா என்றுதான் முதலில் பார்ப்பேன். அதன்பிறகுதான் கதை, கதாநாயகன் எல்லாம். சிறந்த இயக்குனர் படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி