இதையடுத்து அந்த பண்ணையில் உள்ள கோழிகள் அனைத்துக்கும் பறவை காய்ச்சல் பரவி இருக்கும் என கருதப்பட்டதால் பண்ணையில் உள்ள 1 லட்சம் கோழிகளையும் அழிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 1 லட்சம் கோழிகள் கொன்று புதைக்கப்பட்டது.ஐதராபாத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் மற்றும் மராட்டியம், ஒடிசா மாநிலங்களுக்கு கறிக்கோழிகள் அனுப்பப்படுகிறது.
பறவை காய்ச்சலை தொடர்ந்து கறிக்கோழிகளை சாப்பிட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் கறிக்கோழி விற்பனை கடுமையாக சரிந்து விட்டது.
ஐதரபாத்தை தொடர்ந்து மெடக், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பீதி பரவி உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் வருகிற 18–ந்தேதி வரை தெலுங்கானா மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கறிக்கோழி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம்’’ என தெலுங்கானா சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் தற்போது இருப்பில் உள்ள முட்டை மற்றும் கோழிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழித்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி