புது டெல்லி:-இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது ஷமி. உலக கோப்பையில் 18 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர் டெவில்சிஸ் அணியில் ஒப்பந்தமாகி இருந்தார். உடல் தகுதியுடன் இல்லாததால் அவர் டெல்லி அணி விளையாடிய 3 ஆட்டத்திலும் விளையாட வில்லை.
இந்த நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்த காயத்துக்காக அவர் ஆபரேசன் செய்ய உள்ளார். காயத்தில் இருந்து முற்றிலும் குணமடைய 2 மாதம் ஆகலாம் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி