எஸ்.கே.பி. கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டது மிகவும் சந்தோஷமாக உள்ளது. கடந்தாண்டு கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் திரைப்பட வேலை காரணமாக என்னால் வர இயலவில்லை.தற்போது வேலையின் நடுவே இங்கு வந்திருப்பது மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கிறது. கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவன். தற்போது திரைப்பட இயக்குனராக உள்ளேன். என் வாழ்வில், என்னை சுற்றி நடந்த சம்பவங்களை வைத்து தான் படம் இயக்குகிறேன். நான் எடுக்கும் படத்தை தியேட்டரில் மக்களோடு, மக்களாக அமர்ந்து படம் பார்ப்பேன். அப்போது தான் அவர்களின் மன நிலையை அறிய முடியும். மக்கள் ரசனைக்கு ஏற்ப படம் எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அவர் பேசினார். அதன் பின்னர் மாணவ– மாணவிகளின் கேள்விகளுக்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் அளித்தார்.
கேள்வி:– இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது?
பதில்:– இதுவரை 14 படங்கள் இயக்கி உள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும். கமல் சாரிடம் 15 நிமிடங்களில் ‘வேட்டையாடு விளையாடு’ கதையை சொல்லி படத்தை இயக்க சம்மதம் பெற்றேன். இந்த குறுகிய நேரத்தில் கமலை திருப்திபடுத்த சினிமா குறித்த தொலை தொடர்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
கேள்வி:– மெக்கானிக்கல் என்ஜினீயரிங், திரைப்பட இயக்குனர் இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது?
பதில்:– மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு இல்லை என்றால் திரைப்பட இயக்குனர் இல்லை. கல்லூரி படிப்பு இல்லைன்னா திரைப்பட துறையில் நான் இருப்பது கடினம்.
கேள்வி:– உங்கள் படங்களில் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்?
பதில்:– தமிழ் படத்தில் தமிழ் பேச தெரிந்த நடிகையை நடிக்க வைக்கும் போது தான் சரியான மொழி உச்சரிப்பை பெற முடியும். அந்த வகையில் நடிகை சமந்தாவிற்கு 3 மொழிகள் பேச தெரியும். எனவே நடிகை சமந்தாவை ரொம்ப பிடிக்கும். அதே போல் நடிகை திரிஷாவையும் பிடிக்கும்.
கேள்வி:– ஹாலிவுட் படம் இயக்குவீர்களா? இயக்கினால் யாரை ஹீரோவாக தேர்ந்து எடுப்பீர்கள்?
பதில்:– அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன்.
கேள்வி:– மின்னலே, விண்ணை தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் 2–ம் பாகம் இயக்குவீர்களா?
பதில்:– விரைவில் என்னை அறிந்தால் 2–ம் பாகம் இயக்குவேன்.
கேள்வி:– நட்பு–காதல் இவற்றில் எது சிறந்தது?
பதில்:– வாழ்க்கையில் நட்பு தான் சிறந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ– மாணவிகளின் பெற்றோர், கல்லூரி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி மாணவர் நன்றி கூறினார். முன்னதாக மாணவ –மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி