லண்டன்:-செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஐஸ் கட்டி நிலையில் தண்ணீர் உறைந்து இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் ‘கியூரியா சிட்டி’ விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அது எடுத்து அனுப்பிய போட்டோக்களின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இது அக்கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கலாம் என கருதப்படுகிறது.
செவ்வாய் கிரக மண்ணில் பெர் குளோரைட் என்ற ரசாயன பொருள் உள்ளது. இது உறையும் தன்மை குறைவானதாகும். எனவே ஐஸ்கட்டியாக தண்ணீர் உறைய கூடிய சூழ்நிலை இல்லை. ஆகவே, தண்ணீர் திரவ நிலையில் உள்ளது. தற்போது அது கடும் உப்பு தன்மை வாய்ந்ததாக உள்ளது. அங்குள்ள மண்ணில் கால்சியம் பெர்குளோரைடும் உள்ளது. இது காற்று மண்டலத்தில் இருந்து நீராவியை உறிஞ்சும் தன்மை உடையது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி