வாஷிங்டன்:-2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் அடுத்த ஆண்டோடு முடிகிறது. அமெரிக்காவில் ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் ஒபாமா திரும்பவும் போட்டியிட முடியாது.
கட்சியில் ஒபாமா அடுத்து அதிக செல்வாக்குடன் இருக்கும் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளிவுறவு மந்திரிமான ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க முடிவு செய்துள்ளார்.
மேலும் அதற்கான பிரச்சாரத்தையும் அவர் தொடங்கியுள்ளார். ’எவரிடே அமெரிக்கன்’ என்ற விளம்பர வரிகளுடன் பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளார். அதன் முதல்படியாக தனது பெயரில் இணையதளத்தில் 2 நிமிடம் ஓடக்கூடிய விடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி