துபாய்:-துபாயில் உள்ள ஹெராயிட் வாட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் பட்டம் பெற்ற நிவேதா(23) சான்றிதழ் பெற்ற உடல்பயிற்சி நிபுணராகவும் உள்ளார். கடந்த சனிக்கிழமை துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியா போட்டியில் இவரும் பங்கேற்றார்.
முதலில் இந்திய பாணி உடை அணிந்து உயரமான ஹீல்ஸ் செருப்புடன் மேடை மீது நடந்து செல்லும் சுற்றில் தேர்வாகிய இவர், பின்னர், தன்னைப்பற்றிய சுய அறிமுகம் செய்து கொள்ளும் சுற்றிலும் தேர்ச்சி பெற்றார். அதையடுத்து, இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடும் சுற்று மற்றும் நடுவர்களின் கேள்விகளுக்கு சாதுர்யமாக பதில் அளிக்கும் சுற்று போன்றவற்றில் அதிக புள்ளிகளை பெற்ற நிவேதா பெத்துராஜ் இறுதியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியா பட்டம் வழங்கி கிரீடம் சூட்டப்பட்டது. இந்த வெற்றியை திறவுகோலாக வைத்து உலக அளவில் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி