சென்னை:-நடிகர் அஜித் ஒரு சிறந்த மனிதர் என்று திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அஜித்துடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் இணைந்த நடித்த ராணா, தற்போது அஜித்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
சமீபத்தில் ராணா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பேசியிருக்கிறார். அதில் ஒரு ரசிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு, கோலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் அஜித். இவர் உலகத்திலேயே சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி